Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மெகா வேட்டை: சிறார்களைப் பாதிக்கும் பாலியல் கோப்புகள் மீது 'OP PEDO BERSEPADU 2.0' அதிரடி!
தற்போதைய செய்திகள்

மெகா வேட்டை: சிறார்களைப் பாதிக்கும் பாலியல் கோப்புகள் மீது 'OP PEDO BERSEPADU 2.0' அதிரடி!

Share:

'OP PEDO BERSEPADU 2.0': 880,000க்கும் அதிகமான பாலியல் குற்றங்கள் தொடர்பான டிஜிட்டல் கோப்புகள் மீட்பு!

சோதனை நடவடிக்கைக் காலம்: செப்டம்பர் 22 – 30, 2025

நடத்தியது: மலேசியக் காவற்படையின் D11 பிரிவும் MCMCயும்

சோதனை: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 37 இடங்களில்

31 பேர் கைது

• முதன்மைக் குறிக்கோள்கள்: 25

• தொடர் கைதுகள்: 6

• வயது: 12 – 71 வயது

• கைதானவர்களில்: 6 சிறார்கள், 1 அயல்நாட்டவர்

பறிமுதல்

82 டிஜிட்டல் சாதனங்கள், அவற்றுள்:

• கணினிகள்

• கைபேசிகள்

• மோடேம்

• தரவு சேமிப்புக் கருவிகள்

பரிசோதனை முடிவுகள்

1. 880,000க்கும் அதிகமான டிஜிட்டல் கோப்புகள் கண்டறியப்பட்டன:

o சிறார் பாலியல் தொடர்புடையப் பொருட்கள் (CSAM)

o பெரியவர்க; தொடர்பான ஆபாசப் படங்கள்

2. 2024 டிசம்பரில் நடந்த 'Op Pedo 1.0' இல் கண்டறியப்பட்ட 40,000 கோப்புகளுடன் ஒப்பிடுகையில், இஃது 20 மடங்கு அதிகம்.

செயல்பாட்டு முறை

1. சந்தேக நபர்கள் CSAM பொருட்களை இருண்ட இணையதளம் (Dark Web), பொதுச் சேமிப்பகங்கள், சமூக ஊடகங்கள் மூலம் விநியோகம் செய்துள்ளனர்:

o டெலிகிராம் & வாட்ஸ்அப்

o முகநூல் & இன்ஸ்டாகிராம்

o Tumblr

2. சிலர் பணம் செலுத்திய அணுகலுக்கு இ-பணப்பைகளையும் QR குறியீடுகளையும் பயன்படுத்தி உள்ளனர்.

சோதனையின் முக்கியத் தரவுகள்

• சமய ஆசிரியர்கள் போன்ற முக்கியப் பதவிகளில் உள்ள தனிநபர்களின் ஈடுபாடு உள்ளது.

• இக்குற்றமானது அதிகமான வணிகமயமாக்கல், நிதிக் காரணங்களை இலக்காகக் கொண்டதாக மாறியுள்ளது.

சட்ட நடவடிக்கைகள்

1. நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்: 17

o 15 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டு ரிம1,000 முதல் ரிம15,000 வரை அபராதம் செலுத்தினர்.

o 2 பேர் வழக்கை எதிர்கொள்ளத் தேர்ந்தெடுத்தனர்.

2. ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்கள்: 14

3. திறக்கப்பட்ட விசாரணை ஆவணங்கள்: 29

o குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017

o தண்டனைச் சட்டம்

o குடிநுழைவுச் சட்டம் 1959/63

மூலம்: தேசியக் காவற்படைத் தலைவர் டத்தோஸ்ரீ மொஹமட் காலிட் இஸ்மாயில்

Related News