Mar 15, 2026
Thisaigal NewsYouTube
மேலும் 8 எம்.பி.க்கள் பிரதமரை ஆதரிக்கலாம்
தற்போதைய செய்திகள்

மேலும் 8 எம்.பி.க்கள் பிரதமரை ஆதரிக்கலாம்

Share:

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் பெர்சத்து கட்சியைச் சேர்ந்த மேலும் 7 அல்லது 8 நாடாளுமனற உறுப்பினர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிற்கு தங்களின் பிளவுப்படாத ஆதரவை நல்கலாம் என்று புக்கிட் காண்டாங் எம்.பி. சையத் அபு ஹுசின் ஹாபிஸ் சையத் அப்துல் பசல் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் துபாய் நகர்வின் மூலம் நடப்பு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சித்தமாக உள்ளனர் என்று கூறப்படுவது வெறும் வதந்தியாகும் என்று பிரதமர் அன்வாருக்கு தமது ஆதரவை வழங்கிய பெர்சத்து கட்சியின் எம்.பி.யான சையத் அப்துல் பசல் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் மக்களவைக்கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே பெர்சத்து கட்சியை சேர்ந்த 7 அல்லது 8 எம்.பி.க்கள் தங்கள் ஆதரவை பிரதமர் அன்வாருக்கு நல்குவதாக அறிவிக்கக்கூடும் என்று சையத் அப்துல் பசல் குறிப்பிட்டார்

Related News