Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பூலாய் தொகுதியை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்ற முடியும்
தற்போதைய செய்திகள்

பூலாய் தொகுதியை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்ற முடியும்

Share:

வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இடைத் தேர்தல்களில் வாக்கு செலுத்துவதற்கு 90 விழுக்காடு மலாய்க்காரர்கள் திரள்வார்கயோனால் அவ்விரு தொகுதிகளையும் மிகச் சுலபத்தில் பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்ற முடியும் என்று அந்த கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.

பெர்க்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு மலாய்க்காரர் அல்லாதவர்களின் 20 விழுக்காடு ஆதரவு கிடைத்தாலே அந்த இரு தொகுதிகளையும் பக்காத்தான் ஹராப்பானிடமிருந்து கைப்பற்ற முடியும் என்று முகைதீன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நடந்த முடிந்த தேர்தல்களை அடிப்படையாக கொண்டு பார்க்கையில் வாக்களிப்பு தினத்தன்று மலாய்க்காரர்கள் 80 விழுக்காடு திரண்டாலேயே அந்த தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனலின் வெற்றி உறுதி செய்யப்படும் என்று ஆய்வுகள் காட்டுவதாக முகைதீன் குறிப்பிட்டார்.

Related News