கோலாலம்பூர், நவம்பர்.15-
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 299.7 ஆவது கிலோமீட்டரில் பாங்கி அருகில் இன்று காலையில் நிகழ்ந்த விபத்தில் இரு பெண்கள் காயமுற்றனர்.
அவர்கள் பயணித்த வேன், வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி, அருகில் உள்ள மின் கம்பத்தில் மோதியதில் இரு பெண்களில் ஒருவர் வாகனத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டார் என்று தீயணைப்பு அதிகாரி முகமட் ஷாம்சுல் கமாருடின் தெரிவித்தார்.
40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுக்கு கால் முறிவு ஏற்பட்ட வேளையில் மற்றொருவருக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








