Aug 10, 2026
Thisaigal NewsYouTube
பி.எல்.கே.என்  3.0: தேர்வு செய்யப்பட்ட பயிற்சியாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல்
தற்போதைய செய்திகள்

பி.எல்.கே.என் 3.0: தேர்வு செய்யப்பட்ட பயிற்சியாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல்

Share:

பி.எல்.கே.என் 3.0 எனப்படும் தேசிய சேவைப் பயிற்சித் திட்டத்தின் 4/2026 தொடருக்கு தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்க குறுஞ்செய்தி முறையை தேசிய சேவைப் பயிற்சித் துறை பயன்படுத்தவுள்ளது.

இந்தப் பயிற்சி வரும் அக்டோபர் 3 முதல் நவம்பர் 16 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தகவல்களை விரைவாகவும் நேரடியாகவும் திறம்படவும் வழங்குவதற்காக எஸ்.எம்.எஸ் முறை பயன்படுத்தப்படவுள்ளதாக அத்துறையின் தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் டத்தோ மர்ஸூகி மொக்தார் தெரிவித்துள்ளார்.

எஸ்.எம்.எஸ் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஈ-பி.எல்.கே.என் இணையதளத்தைப் பார்வையிட்டு, பயிற்சிக்கு அறிக்கை செய்யும் வழிமுறைகள், தேர்வு நிலை மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முழுமையான தகவல்களைப் பெறுமாறு அறிவுறுத்தப்படுவர்.

கடந்த காலங்களில் சிலர் தங்களது தேர்வு நிலையை அறியாமல் இருந்ததாலும், பயிற்சி தொடங்கும் தேதி மற்றும் அறிக்கை செய்ய வேண்டிய விவரங்களைத் தவறவிட்டதாலும் திட்டமிட்டபடி பயிற்சியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளா

Related News