உள்ளூர் சமூகங்களுக்கு எளிதில் அணுகக்கூடிய பொழுதுபோக்கு வசதிகளை வழங்கும் நோக்கில், 2030-ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் குறைந்தது 1,000 மடானி பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்படும் என தேசிய நிலப்பரப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதுவரை 216 பூங்காக்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 100 பூங்காக்கள் கட்டுமானத்தில் உள்ளதாக அதன் தலைமை இயக்குநர் மன்சோர் முகமட் தெரிவித்துள்ளார்.
மேலும், பூங்கா ஒன்றை அமைக்க அதன் அளவு மற்றும் வடிவமைப்பைப் பொறுத்து சராசரியாக 4 லட்சம் முதல் 5 லட்சம் ரிங்கிட் வரை செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பூங்காக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு மத்தியில் அமைக்கப்படுவதால், மக்கள் அவற்றை எளிதில் பயன்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய நிலப்பரப்பு தினத்தை முன்னிட்டு நேற்று மலாக்கா மாநிலம், குருபோங்-ல் நடைபெற்ற பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழாவில் அவர் இதனைத் தெரிவித்துள்ளா








