Sep 15, 2026
Thisaigal NewsYouTube
தாபோங் ஹாஜி அர்.சி.ஐ  அறிக்கை குறித்த விவாதம்: நாடாளுமன்றத்தில் நாளை சிறப்புக் கூட்டம்
தற்போதைய செய்திகள்

தாபோங் ஹாஜி அர்.சி.ஐ அறிக்கை குறித்த விவாதம்: நாடாளுமன்றத்தில் நாளை சிறப்புக் கூட்டம்

Share:

தாபோங் ஹாஜி தொடர்பில், அரச விசாரணை ஆணையமான அர்.சி.ஐ அறிக்கை குறித்து விவாதிக்க, நாடாளுமன்றத்தில் நாளை சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

15-ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடருக்கான சிறப்பு கூட்ட அட்டவணையின்படி, காலை 10 மணிக்கு தொடங்கும் இக்கூட்டம் ஒருநாள் முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் அம்சங்கள் மலேசிய நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளம் மற்றும் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் வழியாக நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது.

அதேவேளையில் இச்சிறப்பு கூட்டம், சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சுல்கிஃப்ளி ஹசன், தாபோங் ஹாஜி தொடர்பான அர்.சி.ஐ அறிக்கை குறித்து விளக்கமளிக்கும் அமர்வுடன் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிக்கை குறித்து விவாதிக்க குறைந்தது 35 முதல் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

தாபோங் ஹாஜி-யின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான 211 பக்கங்களைக் கொண்ட அர்.சி.ஐ அறிக்கை, கடந்த ஜூலை 29-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

கடந்த 2014 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தாபோங் ஹாஜி நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் காணப்பட்ட பல்வேறு பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளை அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

நாளைய சிறப்பு கூட்டத்தில் அர்.சி.ஐ அறிக்கையின் கண்டுபிடிப்புகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரிவாக விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

24 மணி நேர கேகே மார்ட் கடைகள் இனி பாதுகாப்பு மையங்களாக செயல்படும் - கோலாலம்பூர் போலீஸ் அசத்தல் திட்டம்

24 மணி நேர கேகே மார்ட் கடைகள் இனி பாதுகாப்பு மையங்களாக செயல்படும் - கோலாலம்பூர் போலீஸ் அசத்தல் திட்டம்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு