Sep 7, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் மாநில ஜசெக தலைவராக ஜே.அருள்குமார் தேர்வு
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் மாநில ஜசெக தலைவராக ஜே.அருள்குமார் தேர்வு

Share:

நெகிரி செம்பிலான் மாநில ஜசெக தலைவராக அக்கட்சியைச் சேர்ந்த நீலாய் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜே. அருள்குமார் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக அம்மாநில ஜசெக தலைவராகப் பொறுப்பு வகித்த அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அந்தோணி லோக், கடந்த வாரம் பதவி விலகியதையடுத்து, புதிய தலைவராக அருள்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த முடிவானது இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற மாநில ஜசெக குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

அருள் குமாரின் தேர்வு, ஜசெக கட்சி அனைத்து இன மக்களுக்குமான கட்சி என்பதையும் வெளிப்படுத்துகிறது என்றும் அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாநிலக் குழுவில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் சீனர்களாக இருந்தபோதிலும், அருள் குமாரைத் தலைவராக தாங்கள் தேர்வு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில், ஜசெக கட்சி சார்பில் நீலாய் தொகுதியில் களமிறங்கிய அருள்குமார், 5.937 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்க

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து