Sep 6, 2026
Thisaigal NewsYouTube
கோல லங்காட் மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் பலி
தற்போதைய செய்திகள்

கோல லங்காட் மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் பலி

Share:

சிலாங்கூர் மாநிலம் கோல லங்காட் மின் உற்பத்தி நிலையத்திலுள்ள குளிரூட்டும் கோபுரத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 34 வயது ஒப்பந்தத் தொழிலாளர், 5 மீட்டர் ஆழமுள்ள நீர்த்தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

நேற்று மாலை 7.29 மணியளவில் இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சக ஊழியர் மரப்பலகைகளை எடுக்கச் சென்று விட்டு 15 நிமிடங்களுக்குப் பின்னர் திரும்பிய போது சம்பந்தப்பட்ட தொழிலாளர் காணாமல் போனது தெரியவந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் மின் நிலையத்தில் உள்ள இரண்டு நீர்த்தேக்கங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அவரது உடல் மீட்கப்பட்டது.

மீட்பு நடவடிக்கையானது காலை 5.05 மணிக்கு நிறைவடைந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைக்காக வழக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து