Dec 14, 2025
Thisaigal NewsYouTube
நள்ளிரவில் அதிரடி வேட்டை: ஜோகூர் ஜெயாவில் 49 சட்டவிரோதக் குடியேறிகள் கைது!
தற்போதைய செய்திகள்

நள்ளிரவில் அதிரடி வேட்டை: ஜோகூர் ஜெயாவில் 49 சட்டவிரோதக் குடியேறிகள் கைது!

Share:

ஜோகூர் பாரு, டிசம்பர்.14-

ஜோகூர், தாமான் ஜோகூர் ஜெயாவில் உள்ள 16 வணிக வளாகத்திலும், குடியிருப்புப் பகுதியிலும் நேற்று நள்ளிரவு 12.10 மணிக்கு ‘ஓப் சாப்பு’ என்ற அதிரடிச் சோதனையை ஜோகூர் குடிநுழைவுத் துறை மேற்கொண்டது. இந்த திடீர் வேட்டையில், இந்தோனேசியா, மியான்மார், பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20 முதல் 49 வயதுக்குட்பட்ட 49 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டதாக அதன் இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்தார்.

செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இன்றி நாட்டில் தங்கியிருந்த இவர்கள், சோதனை நடைபெற்ற போது கூரையின் மீது ஏறி தப்பிச் செல்ல முயன்றும், இறுதியில் பிடிபட்டனர். பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த அதிரடிச் சோதனையில் பிடிபட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காக செத்தியா டுரோப்பிக்கா குடிநுழைவுத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related News