Jun 29, 2026
Thisaigal NewsYouTube
செராஸ் ஆலயத்தில் திருட்டு: 13 குற்றப் பின்னணிகளைக் கொண்ட நபர் கைது
தற்போதைய செய்திகள்

செராஸ் ஆலயத்தில் திருட்டு: 13 குற்றப் பின்னணிகளைக் கொண்ட நபர் கைது

Share:

கோலாலம்பூர், மார்ச்.15-

கோலாலம்பூர், செராஸ், தாமான் மாலுரியில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக 32 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவரைக் காவற்படையினர் கைது செய்துள்ளனர். அந்த நபரிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட சில கருவிகளைப் பறிமுதல் செய்த காவற்படை, அவரிடம் நடத்திய சோதனையில் அவர் amphetamine, methamphetamine வகைப் போதைப் பொருட்களைப் பயன்படுத்தியிருப்பதும் உறுதியானது. கைதான நபருக்கு ஏற்கனவே குற்றவியல், போதைப்பொருள் தொடர்பான 13 பழைய குற்றப் பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது அந்த நபரை மார்ச் 21 வரை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த வழக்கு திருட்டு குற்றத்திற்கான சட்டப்பிரிவு 380-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு