Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஆடவர் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்
தற்போதைய செய்திகள்

ஆடவர் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்

Share:

கடந்த மாதம் கிள்ளான், தாமான் செந்தோசா உத்தாமாவில் ஒரு வீட்டில் நிகழ்ந்த கொலை தொடர்பில் ரைடர் என்று அடையாளம் கூறப்பட்ட ஆடவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
42 வயதுடைய B. பிரகாஷ்ராவ் என்று அடையாளம் கூறப்பட்ட ரைடர், போதைப்பொருள் தொடர்பில் ஏற்கனவே 4 குற்றப்பதிவுகளை கொண்டுள்ளதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி சா ஹொங் ஃபொங் தெரிவித்தார்.

கடந்த மே 25 ஆம் தேதி கிள்ளான் , தாமான் செந்தோசா உத்தமாவில் நிகழ்ந்த சம்பவத்தில் ரைடர் என்ற பிரகாஷ் ராவ், 34 வயதுடைய நபரை அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. உடலில் 27 இடங்களில் கடும் காயத்திற்கு ஆளான அந்த நபர உயிரிழந்ததாக எசிபி சா ஹொங் ஃபொங் குறிப்பிட்டார்.

Related News