Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கள்ளச் சந்தையில் மலாயன் புலியின் விலை 3 லட்சம் - ஜோகூர் வனவிலங்குத் துறை தகவல்
தற்போதைய செய்திகள்

கள்ளச் சந்தையில் மலாயன் புலியின் விலை 3 லட்சம் - ஜோகூர் வனவிலங்குத் துறை தகவல்

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.18-

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜோகூரில், கடத்தல் கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மலாயன் புலியின் உடல், கள்ளச் சந்தையில் 2 லட்சம் முதல் 3 லட்சம் ரிங்கிட் வரையில் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஜோகூர் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை இயக்குநர் அப்துல் காடீர் அபு ஹஷிம் தெரிவித்துள்ளார்.

கள்ளச் சந்தையைப் பொருத்த வரையில், புலியின் ஒவ்வொரு பாகத்திற்கும் விலை உண்டு என்று கூறிய அப்துல் காடீர், கைது செய்யப்பட்டுள்ள இருவரும் அப்படி ஒரு முயற்சியில் தான் ஈடுபட்டிருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.

மலாயன் வகை புலிகளானது தற்போது பேராக், பகாங், ஜோகூர், கிளந்தான், திரங்கானு, கெடா, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய 8 மாநிலங்களில் உள்ள காடுகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் மட்டுமே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை, மெர்சிங், ஃபெல்டா தெங்காரோவில் கார் ஒன்றில் இருந்து இறந்த நிலையில் மலாயன் புலியைக் கைப்பற்றிய அதிகாரிகள், அதனைக் கடத்திய இரு ஆடவர்களையும் கைது செய்தனர்.

Related News