Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில்  6 வது வாசல் நீர்க் கசிவு
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில்  6 வது வாசல் நீர்க் கசிவு

Share:

கோலாலம்பூர், ஜூலை 10-

இன்று காலை பெய்த தொடர் மழையின் காரணமாகக் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் உள்ள பயண மையத்தின் 6 வது வாசல் நீர்க் கசிவு ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளதாக , மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானப் பயணத்தில் இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், இந்த மையத்திலிருந்து புறப்பட திட்டமிடப்பட்ட விமானங்கள் மாற்று வாயில்களுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவசர பழுதுபார்ப்பு பணிகளுக்காக பயண மையம் இன்று மதியம் 12 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டும் என்று அது தெரிவித்தது.

இதனால், பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் இந்த மாற்றங்கள் குறித்து உடனடியாகத் தெரிவிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

காலை 8:11 மணியளவில் ஏற்பட்ட இந்த நீர்க் கசிவைச் சரிசெய்ய பராமரிப்புக் குழு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது!

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்