ஷா ஆலாம், ஜூலை.12-
அரை நிர்வாணத்துடன் கூடிய சமய சடங்குகளை ஊக்குவிக்கும் திட்டத்தை ஜாய்ஸ் (JAIS) உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி உத்தரவிட்டுள்ளார்.
ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகளை சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தன்முனைப்பும், ஆன்மிகத்தையும் போதிப்பதாகக் கூறி, புனித நீராடல் குளியல் என்ற பெயரில் அரை நிர்வாண நடனம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் புகார் தொடர்பில் சிலாங்கூர் போலீசார் தற்போது தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஷா ஆலாம் வட்டாரத்தில் நடந்ததாகக் கூறப்படும் இப்புகார் தொடர்பில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர் என்று மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் இக்பால் இப்ராஹிம் இன்று தெரிவித்து இருந்தார்.








