Oct 29, 2026
Thisaigal NewsYouTube

அது அம்மா அப்பாவின் சொத்தாகும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அது அம்மா அப்பாவின் சொத்தாகும்

போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தன் வசம் வைத்திருந்த 4 லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள ரொலெக்ஸ் கைக்கடிகாரங்கள், அவரின் தாயார் மற்றும் மறைந்த தந்தையினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாகும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நேர்மை, நன்னெறிப் பிரிவு தலைவர் டத்தோ செரி அஸ்ரி அஹ்மாட் விளக்கம் அளித்துள்ளார்.

தங்கள் இலாகா மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட போலீஸ்காரரின் விலை உயர்ந்த ரொலெக்ஸ் கைக்கடிகாரங்களை மாது ஒருவர் திருடியதாக ஈப்போ மாஜிஸ்திரேட் நீதின்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

ஒரு போலீஸ் அதிகாரி 4 லட்சம் வெள்ளி மதிப்புள்ள கைக்கடிகாங்களை வைத்திருக்கும் அளவிற்கு அவருக்கு எவ்வாறு பணம் கிடைத்தது என்ற கெப்போங் எம்.பி. லிம் லிப் எங் எழுப்பிய கேள்வி தொடர்பில் அந்த புக்கிட் அமான் போலீஸ் அதிகாரி அஸ்ரி அஹ்மாட் மேற்கண்ட விளக்கத்தை தந்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →