சிலாங்கூர் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பஸ் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து திட்டம், ஆதாயத்தை குறிக்கோளாக கொண்டதில்லை என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பின்ர் இங் சீ ஹான் விளக்கம் அளித்துள்ளார். மாநில மக்கள், பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில் பஸ் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து திட்டம் தொடங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூரை சேர்ந்த ஏழை எளிய மக்கள், குறைந்த வருமானம் கொண்டவர்கள் தங்களின் அன்றாக பணிகளை மேற்கொள்வதற்கு பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துவது மூலம் அவர்களின் பொருளாதார சிரமங்களை குறைக்க வேண்டும்.
இதன் காரணமாகவே சிலாங்கூர் அரசு இந்த பேருந்து திட்டத்தை அமல்படுத்தியதாக சிலாங்கூர் சட்டமன்றத்தில் பெரிக்காத்தான் நேஷனலை சேர்ந்த உலு பெர்னம் சட்டமன்ற உறுப்பினர் முய்சூடின் முய்ஹுடி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் இங் சீ ஹான் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.








