நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் வாக்குவாதத்தின் ஈடுபட்ட போது அடவாடித்தனமாக நடந்து கொண்டதாக கூறப்படும் முன்னாள் கல்வி அமைச்சரும், புத்ராஜெயா எம்.பி.யுமான ரட்சி ஜிடின் ஐ, மக்களவையில் இருந்து இடை நீக்கம் செய்யும்படி சட்டத்துறை தலைவர் அசாலினா ஒத்மான் சைட் டிற்கு மடானி அரசாங்கத்தின் அரசியல் செயலாளர்கள் மன்றம் கடிதம் அனுப்பவிருக்கிறது.
இந்த கடிதம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதிக்கு முன்னதாகவே குறிப்பாக, 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே அனுப்பி வைக்கப்படும் என்று பிரதமரின் முதிர் நிலை அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கந்தர் முகமது அகின் தெரிவித்துள்ளார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


