நாளை நடைபெறவிருக்கும் ஒற்றுமை அரசாங்கத்தின் மாநாட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் நலனை முன்நிறுத்தி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது, நாடு மீண்டும் பின்னடைவை நோக்கி செல்வதை தவிர்ப்பது உட்பட நாட்டின் வளப்பம் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தமது ஒற்றுமை அரசாங்கத்திற்கு துணை நின்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த மாநாட்டில் சில முக்கிய அறிவிப்புகளை பிரதமர் வெளியிடக்கூடும் என்று கூறப்படுகிறது.
கிளந்தான் முன்னாள் மந்திரி புசார் மறைந்த நிக் அப்துல் அஸிஸின் இரு புதல்வர்களையும் பிரதமர் நேற்று சந்தித்தது, பாஸ் கட்சியுடனான பிணக்குகளை தவிர்க்கும் ஒரு நடவடிக்கையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நாடு தோல்வி அடைந்து விடக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கும் பிரதமர், அது தொடர்புடைய விவரங்களை நாளை தமது கொள்கை உரையில் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


