கோலாலம்பூர், அக்டோபர்.18-
கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் இன்று நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழாவில் பெரிக்காத்தான் பொதுச் செயலாலார் டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலியுடன் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
பாரிசான் நேஷனலில் ஓர் உறுப்புக் கட்சியான மஇகா, அந்த பாரம்பரியக் கூட்டணியிலிருந்து விலகி, டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் இணையலாம் என்று கூறப்பட்டு வரும் வேளையில் அதற்கு கட்டியம் அமைப்பது போல் அஸ்மின் அலியும், சரவணனும் ஒரே நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டனர்.
நகைக்கடை திறப்பு விழாவில் இரு தலைவர்களுக்கும் மாலை அணிவிக்கப்பட்டு, பொன்னாடை போர்த்தப்பட்டு, தலைப்பாகை அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது மிகுந்த கவன ஈர்ப்பதாக அமைந்தது.