நாளை மறுநாள் ஆகஸ்ட் 12 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள், 4 மாநிலங்களின் வெற்றியை தீரமானிக்கும் “ கிங் மேக்கர்களாக” இருக்க முடியும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு மற்றும் கெடாவின் சில பகுதிகளில் மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்கள் கிங்மேக்கர்களாக இருக்க முடியும் என்று இல்ஹாம் ஆய்வு மையம் கூறுகிறது.
மலாய்க்காரர் அல்லாதவர்களின் வாக்குகளால், குறிப்பாக ஆறு மாநிலங்களில் - நான்கு மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வலுவாக பாதிக்கப்படும் என்று இல்ஹாம் மையம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
15வது பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும் போது, மலாய்க்காரர்களின் வாக்குகளில் பிளவு, நேரடிப் போட்டியின் காரணமாக பெரிகாத்தான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான்-பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு இடையே கடுமையாக இருக்காது.
இதனால் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு மற்றும் கெடாவின் தெற்குப் பகுதியில் உள்ள கலப்பு தொகுதிகளில் , மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்கள் “கிங்மேக்கர்களாக” இருக்கலாம் என்று ஆய்வில் கண்டறிந்துள்ளது.
கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான மலாய் வாக்காளர்கள் இருப்பதால் அந்த இரண்டு மாநிலங்களிலும் நிலைமை வேறாகும்.
எனினும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் , அவரின் ஒற்றுமை அரசாங்கம் மற்றும் அதன் மடானி கொள்கைகள் ஆறு மாநிலங்களிலும் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களிடையே தொடர்ந்து உயர்வாக மதிப்பிடப்பட்டுள்ளன என்று அந்த ஆய்வு மையம் கூறுகிறது.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


