Sep 27, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் 5 வாகனங்கள் மோதி விபத்து: கார் தீப்பற்றி எரிந்ததில் இருவர் காயம்
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் 5 வாகனங்கள் மோதி விபத்து: கார் தீப்பற்றி எரிந்ததில் இருவர் காயம்

Share:

மலாக்கா, ஜாலான் பெர்தாம் மாலிம் ஜாலான் பெர்த்தாம் மாலிம் பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் ஐந்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

ஜாலான் பெர்த்தாம் மாலிம் பகுதியிலிருந்து செங் நோக்கிச் செல்லும் பாதையில் உள்ள பஜார் மாரா முன்புறம் இந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்தில் டொயோட்டா விவோஸ், மெர்சிடிஸ், தாடானோ வகை கிரேன், பெரோடுவா பெஸா மற்றும் புரோட்டான் சாகா எஃப்எல்எக்ஸ் ஆகிய ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்டிருந்தன.

இவ்விபத்தில் மோதிய வேகத்தில் புரோட்டான் சாகா கார் தீப்பற்றி எரியத் தொடங்கியதில், அது 90 சதவீதம் சேதமடைந்தது.

காரில் இருந்த 50 மற்றும் 60 வயது மதிக்கத்தக்க இருவர் காயங்களுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

செங் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Related News

மலாக்காவில் 5 வாகனங்கள் மோதி விபத்து: கார் தீப்பற்றி எரிந... | Thisaigal News