ஆசிரியர்கள் கொண்டிருக்கின்ற உயர்க்கல்வி தகுதிக்கு ஏற்ப, அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது குறித்து கல்வியமைச்சு பரிசீலித்து வருகிறது.
ஆசிரியர்களின் சம்பள உயர்வு கோரிக்கை குறித்த கல்வி அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், உயர்நெறியும் ஆசிரியர் சேவை தரமும் கல்வி அமைச்சின் முக்கிய இலக்காக இருக்கும் நிலையில் ஆசிரியர்கள் தகுதி அடிப்படையில் இந்த கோரிக்கை ஏற்புடையதாக உள்ளது என்றும் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து அமைச்சு பரிசீலித்து வரும் வேளையில், நாட்டில் பொருளாதார நிலை மீட்சி கண்டவுடன், அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தில் உயர்வு ஏற்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்ததைத் தொடர்ந்து கல்வி அமைச்சும் இது குறித்து கலந்தாலோசித்து வருவதாக ஃபட்லினா சிடெக் குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


