May 22, 2026
Thisaigal NewsYouTube
பாங் சாக் தாவோ சிறந்த சேவையை வழங்க முடியும்
தற்போதைய செய்திகள்

பாங் சாக் தாவோ சிறந்த சேவையை வழங்க முடியும்

Share:

கோல குபு பாரு, மே 11-

இன்று நடைபெற்று வரும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் தனது சகோதரி பாங் சாக் தாவோ வெற்றி பெறுவாரோயானால் இத்தொகுதி மக்களுக்கு அவரால் சிறந்த சேவையை வழங்க முடியும் என்று இரட்டைப்பிறவி சகோதரிகளில் ஒருவான தங்கை பாங் சாக் யிங் நம்பிக்கை தெரிவித்தார்.

தமது சகோதரி பாங் சாக் தாவோ,வும் தாமும் இரட்டைப் பிறவிகள் என்ற போதிலும் இந்த இடைத் தேர்தலில் அவரை சட்டமன்ற உறுப்​பினராக மக்கள் தேர்வு செய்வார்களேயானால் அவரால் ஒரு சிறந்த சட்டமன்ற உறுப்பினராக நிறைவான சேவையை வழங்க முடியும் என்று பாங் சாக் யிங் குறிப்பிட்டார்.

ஒன்றாக பிறந்து, ஒன்றாக வளர்ந்து, ஒன்றாக தாங்கள் விரும்பிய தொழில்துறைக்கு ​சென்றாலும் என் அக்காள் பாங் சாக் தாவோ ஒரு கடுமையான ​உழைப்பாளி ஆவார். மக்களுக்கு சேவையாற்றுவதை தனது சிறு வயது முதல் விருப்பமாக கொண்டு வந்துள்ளார் என்று கோலகுபு பாரு இடைத் தேர்தலில் நிருபர்களின் கண்களில் எதிர்பாராதவிதமாக தென்பட்ட 31 வயது பாங் சாக் யிங் இவ்வாறு தெரிவித்தார்.

Related News