Oct 9, 2026
Thisaigal NewsYouTube

ஈரான் – இஸ்ரேல் பதட்டநிலை – மலேசியர்கள் மளிகைப் பொருட்களுக்கு அதிகம் செலவிட நேரிடும்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஈரான் – இஸ்ரேல் பதட்டநிலை – மலேசியர்கள் மளிகைப் பொருட்களுக்கு அதிகம் செலவிட நேரிடும்!

கோலாலம்பூர், ஜூன்.21-

மத்தியக் கிழக்கில் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்தால், மலேசியர்கள் மளிகைப் பொருட்களுக்கு மேலும் அதிகமாகச் செலவிட நேரிடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 120 அமெரிக்க டாலரை எட்டினால், போக்குவரத்துச் செலவுகளும் உணவுச் செலவுகளும் அதிகரிக்கும் என மலேசிய அறிவியல்,தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பர்ஜோயாய் பர்டாய், புத்ரா பிசினஸ் ஸ்கூலைச் சேர்ந்த அஹ்மாட் ரஸ்மான் அப்துல் லதிஃப், சன்வே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யியா கிம் லேங் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

உலகளாவிய எண்ணெய் விலை 110அமெரிக்க டாலரை அடைந்தால் கூட, மலேசியாவில் உணவுப் பொருட்கள் 10 விழுக்காடு வரை உயரக்கூடும் என பெர்ஜோயாய் பர்டாய் கூறினார். இந்த விலை உயர்வு, எரிபொருள் மானியங்களைப் பராமரிக்க அரசாங்கத்தின் செலவுகளை அதிகரிக்கும், மேலும் பெரும்பாலான வணிகங்கள் அதிகரித்தச் செலவுகளை நுகர்வோர் மீது சுமத்தும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →