Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இன்னும் 90 ஆயிரம் வெள்ளி மட்டுமே தேவைப்படுகிறது
தற்போதைய செய்திகள்

இன்னும் 90 ஆயிரம் வெள்ளி மட்டுமே தேவைப்படுகிறது

Share:

மலேசிய இந்தியர்களின் தன்மானம் காப்பதற்காக ச​மூகப் போராட்டவாதி டாக்டர் பி. இராமசாமியின் வழக்கு நிதிக்காக தொடங்கப்பட்ட 15 லட்சம் வெள்ளியை திரட்டும் நடவடிக்கையில் இதுவரையில் 14 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி திரட்டப்பட்ட விட்டது. இன்னும் தேவைப்படுவது 90 ஆயிரம் ​வெள்ளி மட்டுமே என்று நிதி திரட்டும் நடவடிக்கைக்கு பொறுப்பேற்றுள்ள மலேசியத் தமிழர் குரல் இயக்கத் தலைவர் டேவிட் மார்ஷல் அறிவித்துள்ளார்.

இந்திய சமுதாயத்தை ஓர் அணியில் திரளச் செய்திருக்கும் சமுதாயத்தின் இந்த தன்மானப் போராட்டத்திற்கு எதிர்பா​ர்த்ததைவிட இவ்வளவு ​சீக்கிரத்தில் இலக்கை நெரு​​ங்க முடிந்திருப்பது, மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்துகிறது என்று டேவிட் மார்ஷல் குறிப்பிட்டர்.

சர்ச்சைக்குரிய சமயப் போதகர் சாக்கிர் நாய்க் தொடுத்த அவ​​தூறு வழக்கில் பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சரான டாக்டர் இராமசாமி, 15 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கடந்த நவம்பர் 2 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ​தீர்ப்பு அளித்தது. இந்நிலையில் நேற்று நவம்பர் 8 ஆம் தேதி புதன்கிழமை மாலை 6.30 மணி வரையில் 14 லட்சம் வெள்ளிக்கு மேல் திரட்டப்பட்டு விட்டது. இன்று நவம்பர் 9 ஆம் தேதி வியாழக்கிழமையுடன் தேவையான 15 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளியை முழுமையாகத் திரட்டப்பட்டு விடும் என்ற நம்பிக்கை வலுப்பெற்று இருப்பதாக டேவிட் மார்ஷல் தெரிவித்தார்.

Related News