Oct 16, 2026
Thisaigal NewsYouTube

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

செத்தியு, நவ. 25-


திரெங்கானு, பண்டார் பெர்மைசூரியில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 4.50 மணியளவில் கோலத்திரெங்கானு – கோத்தாபாரு கூட்டரசு நெடுஞ்சாலையின் 53 ஆவது கிலோமீட்டரில் கம்போங் சுங்கை லெரேக் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

மூவர் பயணம் செய்த பெரோடுவா அக்ஸியா ரக கார், எதிரே வந்த 4 வீல் டிரைவ் பிக்காப் வாகனத்துடன் மோதியதில் மூவரில் இருவர் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் ஒருவர், செத்தியூ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

55 வயது கமருடீன் இப்ராஹிம், அவரின் மனைவி 54 வயது மைமூனா மாட் இசா மற்றும் பெண் பிள்ளையான 30 வயது நூர் ஆரிடியானா கமருடின் ஆகியோரே இச்சம்பவத்தில் மாண்டவர்கள் என்று அடையாளம் காணப்பட்டதாக செத்தியூ போலீஸ் நிலையத் தலைவர் முகமட் ஸையின் மாட் டிரிஸ் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →