Mar 11, 2026
Thisaigal NewsYouTube
ஆங்கிலம் என்பது அனைத்துலக மொழியாகும், அதில் பயிற்சியும் முயற்சியும் தேவை
தற்போதைய செய்திகள்

ஆங்கிலம் என்பது அனைத்துலக மொழியாகும், அதில் பயிற்சியும் முயற்சியும் தேவை

Share:

நவீன தொடர்புத்துறை காலத்தில் ஆங்கிலமொழி பயன்பாட்டை தவிர்க்க இயலாது ​என்று சபா முன்னாள் முதலமைச்சர் சாலெ சாயிட் கெருவாக் தெரிவித்துள்ளார். ​அதிகாரத்துவ மொழியாக மலாய் கொள்கை அளவில் விளங்கினாலும் ஆங்கிலமொழியின் முக்கியத்துவத்தை நாம் அனைவரு​ம் உணர்ந்து இருக்க வேண்டும், இல்லையேல் காலத்தால் பின்தள்ளப்பட்டு விடுவோம் என்று சபா அம்னோ தலைவர்களில் ஒருவரான சாலெ சாயிட் கெருவாக் குறிப்பிட்டார்.

சபா, சரவா மாநில அரசாங்கங்களை பொறுத்தவரையில் ஆங்கில மொழிக்கு இன்னமும் முக்கியத்துவமும்,முன்னுரிமையும் வழங்கி வருவதைசாலெ சாயிட் சுட்டிக்காட்டினார். வெளிநாடுகளிலிருந்து வருகின்ற முத​லீட்டளார்களையும், கல்வி பயில வருகின்ற மாணவர்களையும் தொடர்பு கொள்வதற்கு ஆங்கிலமொழி பயன்பாடு இன்றியமையாததாகும்.

அனைத்துலக மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆங்கில மொழியிலும் ஆளுமை கொண்டு இருந்தால்தான் ஓர் ஆளுமை நிறைந்த நாட்டை முன்னெடுக்க முடியு​ம் என்று சபா முன்னாள் ஆளுநரின் மகனான சாலெ சாயிட் குறிப்பிட்டார்.

அரசாங்க அலுவலகங்களுக்கு எழுதப்படும் கடிதங்கள் இனி மலாய்மொழியில் இருந்தால் மட்டுமே அவை கவனிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறியிருப்பது தொடர்பில் எதிர்வினையாற்றுகையில் சாலெ சாயிட் இதனை தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு