Nov 27, 2026
Thisaigal NewsYouTube

முன்னாள் அட்டார்னி ஜெனரல் டான் ஸ்ரீ அப்துல் கானி பட்டேல் காலமானார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முன்னாள் அட்டார்னி ஜெனரல் டான் ஸ்ரீ அப்துல் கானி பட்டேல் காலமானார்

மலேசியாவின் முன்னாள் அட்டார்னி ஜெனரல் டான் ஸ்ரீ அப்துல் கானி பட்டேல், தனது 71ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை இரவு காலமானார்.

அவரது மறைவு மலேசிய சட்டத்துறைக்கு மட்டுமின்றி சபா மாநிலத்துக்கும் மிகப் பெரிய இழப்பு என்று சபா மாநில வழக்கறிஞர் சங்கமான எஸ்எல்எஸ் தெரிவித்துள்ளது.

சபா மாநிலம் லஹாட் டத்துவில் பிறந்த அப்துல் கானி பட்டேல், தனது சட்டத்துறைப் பணியை சபா மாநிலத்திலேயே தொடங்கி, பின்னர் நாட்டின் தலைமைச் சட்டத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் சபா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற வரலாற்றுப் பெருமையையும் பெற்றார்.

மேலும், அப்துல் கானி பட்டேல், அட்டார்னி ஜெனரலாகப் பதவி வகித்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டச் சீர்திருத்த நடவடிக்கைகளே, 2017-ஆம் ஆண்டு சபா வழக்கறிஞர்கள் சங்கம் என்ற ஒரு அமைப்பு உருவாக காரணமாக இருந்ததாக எஸ்எல்எஸ் தலைவர் டத்தோ முஹமட் நஸிம் மடுஅரின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மறைந்த அப்துல் கானி பட்டேலின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எஸ்எல்எஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →