Nov 27, 2026
Thisaigal NewsYouTube

ஏர் ஏசியாவின் நிதி நெருக்கடி மேலும் மோசமடைந்தால் அரசாங்கம் தலையிட முடிவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஏர் ஏசியாவின் நிதி நெருக்கடி மேலும் மோசமடைந்தால் அரசாங்கம் தலையிட முடிவு

நாட்டின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் ஏசியாவின் நிதி நெருக்கடி மேலும் மோசமடைந்தால், உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதிக்கப்படுவதைத் தடுக்க, அரசாங்கம் தலையிட வேண்டிய நிலை ஏற்படலாம் என்று இரண்டாவது நிதியமைச்சர் அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்றைய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் பேசிய அவர், அந்நிறுவனத்தின் நிதி நெருக்கடி நீடித்து, மேலும் தீவிரமடையும் பட்சத்தில், அரசாங்கம், மாற்று நடவடிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டியிருக்கும் என்றார்.

அதேவேளையில், ஏர் ஏசியா நிறுவனத்துக்கு கடன் உத்தரவாதம் வழங்குவது அல்லது அரசாங்க நிதியை முதலீடு செய்வது உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கைக்கும் இதுவரை அரசாங்கம் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதையும் அமீர் ஹம்ஸா தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், தேவை ஏற்பட்டால், வண்ட்ரிஸ் எனெர்ஜி (Vantris Energy) நிறுவனத்தின் மறுசீரமைப்பில் பின்பற்றப்பட்டதைப் போன்ற நிர்வாக மாற்றங்கள் மற்றும் மேலாண்மை வலுப்படுத்தும் நடவடிக்கைகளையும் பரிசீலிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பங்குதாரர்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்றும், பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதே முக்கியம் என்றும் அமீர் ஹம்ஸா குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
96.2 கிலோ போதைப்பொருள் கடத்தல்: 3 ராணுவ அதிகாரிகள் உட்பட 6 பேர் மீது குற்றச்சாட்டு

96.2 கிலோ போதைப்பொருள் கடத்தல்: 3 ராணுவ அதிகாரிகள் உட்பட 6 பேர் மீது குற்றச்சாட்டு

சுகே நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த ரேபிட் கேஎல் பேருந்து – ஓட்டுநர் காயமின்றித் தப்பினார்

சுகே நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த ரேபிட் கேஎல் பேருந்து – ஓட்டுநர் காயமின்றித் தப்பினார்

16 இடங்களில் சரமாரி வெட்டுக்காயங்கள்! படுகொலை செய்யப்பட்ட இந்திய ஆடவர் மீது 5 குற்றப் பதிவுகள்!

16 இடங்களில் சரமாரி வெட்டுக்காயங்கள்! படுகொலை செய்யப்பட்ட இந்திய ஆடவர் மீது 5 குற்றப் பதிவுகள்!

கேளிக்கை மையங்களைக் குறிவைத்து போதைப்பொருள் விற்பனை! சீன நாட்டவர்கள் 6 பேர் கைது

கேளிக்கை மையங்களைக் குறிவைத்து போதைப்பொருள் விற்பனை! சீன நாட்டவர்கள் 6 பேர் கைது

கேபிள் திருடர்களின் வெறிச்செயல்! குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமான 22 வயது இளைஞர் பலி

கேபிள் திருடர்களின் வெறிச்செயல்! குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமான 22 வயது இளைஞர் பலி

இந்தியர்களுக்கான விசா இல்லா நுழைவு 2027 இறுதிவரை நீட்டிக்கப்பட வேண்டும்! ஹோட்டல் சங்கம் கோரிக்கை

இந்தியர்களுக்கான விசா இல்லா நுழைவு 2027 இறுதிவரை நீட்டிக்கப்பட வேண்டும்! ஹோட்டல் சங்கம் கோரிக்கை