Nov 26, 2026
Thisaigal NewsYouTube

கேளிக்கை மையங்களைக் குறிவைத்து போதைப்பொருள் விற்பனை! சீன நாட்டவர்கள் 6 பேர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கேளிக்கை மையங்களைக் குறிவைத்து போதைப்பொருள் விற்பனை! சீன நாட்டவர்கள் 6 பேர் கைது

கோலாலம்பூரில் உள்ள கேளிக்கை மையங்களையும் வெளிநாட்டுப் பயணிகளையும் குறிவைத்து, போதைப்பொருள் கலந்த சுவையூட்டப்பட்ட பானப் பொட்டலங்களை விற்பனை செய்து வந்த கும்பலைப் போலீஸ் துறை முறியடித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய மூன்று வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில், சீன நாட்டவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து சுமார் 7 கிலோகிராம் எம்டிஎம்எ, 230 கிராம் மெத்தாம்பெத்தமின் மற்றும் 13.14 கிராம் கெத்தாமின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 1.05 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடுமையான பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளைப் போதைப்பொருள் சேமிப்புக் கிடங்குகளாகவும், அவற்றைச் சுவையூட்டப்பட்ட பானப் பொட்டலங்களாக மாற்றும் இடங்களாகவும் இந்தக் கும்பல் பயன்படுத்தி வந்துள்ளது.

ஒவ்வொரு பொட்டலமும் 300 முதல் 350 ரிங்கிட் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும், இந்தக் கும்பல் கடந்த ஆறு மாதங்களாகச் செயல்பட்டு வந்ததாகவும் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் அஸ்வான் அமின் நோர்டின் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேபிள் திருடர்களின் வெறிச்செயல்! குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமான 22 வயது இளைஞர் பலி

கேபிள் திருடர்களின் வெறிச்செயல்! குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமான 22 வயது இளைஞர் பலி

இந்தியர்களுக்கான விசா இல்லா நுழைவு 2027 இறுதிவரை நீட்டிக்கப்பட வேண்டும்! ஹோட்டல் சங்கம் கோரிக்கை

இந்தியர்களுக்கான விசா இல்லா நுழைவு 2027 இறுதிவரை நீட்டிக்கப்பட வேண்டும்! ஹோட்டல் சங்கம் கோரிக்கை

சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புதிய தேசிய பாதுகாப்புக் கொள்கை!

சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புதிய தேசிய பாதுகாப்புக் கொள்கை!

ராணுவ விமானங்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்! 3 ஆகாயப்படை அதிகாரிகள் உட்பட 6 பேர் நாளை குற்றஞ்சாட்டப்படுகின்றனர்

ராணுவ விமானங்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்! 3 ஆகாயப்படை அதிகாரிகள் உட்பட 6 பேர் நாளை குற்றஞ்சாட்டப்படுகின்றனர்

ஆங்கிலத்தில் அறிவியல் கற்கும் வாய்ப்பு பறிபோகுமா? கல்வி அமைச்சிடம் எம்.பி. கேள்வி!

ஆங்கிலத்தில் அறிவியல் கற்கும் வாய்ப்பு பறிபோகுமா? கல்வி அமைச்சிடம் எம்.பி. கேள்வி!

கேஎல்எஸ்சிஏஎச் நில விவகாரம்: தவறேதும் செய்யவில்லை – ஹன்னா இயோவின் அரசியல் செயலாளர் விளக்கம்

கேஎல்எஸ்சிஏஎச் நில விவகாரம்: தவறேதும் செய்யவில்லை – ஹன்னா இயோவின் அரசியல் செயலாளர் விளக்கம்