Nov 26, 2026
Thisaigal NewsYouTube

ஆங்கிலத்தில் அறிவியல் கற்கும் வாய்ப்பு பறிபோகுமா? கல்வி அமைச்சிடம் எம்.பி. கேள்வி!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆங்கிலத்தில் அறிவியல் கற்கும் வாய்ப்பு பறிபோகுமா? கல்வி அமைச்சிடம் எம்.பி. கேள்வி!

அடுத்த ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிவியல் பாடம் தனிப்பாடமாக நீக்கப்படுவதால், இருமொழித் திட்டமான டிஎல்பி கீழ் பயிலும் மாணவர்கள் அறிவியலை ஆங்கிலத்தில் தொடர்ந்து கற்க முடியுமா? என இன்று மக்களவையில் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

2027ஆம் ஆண்டு முதல் ஒன்று முதல் மூன்றாம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘அலாம் டான் மனுசியா’ எனும் மனிதனும், சுற்றுச்சூழலும் புதிய பாடம் முழுமையாக மலாய் மொழியில் கற்பிக்கப்படுமா என்றும் அவர் வினவினார்.

இதனால் டிஎல்பி திட்டப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மூன்றாம் ஆண்டில்தான் அறிவியலை ஆங்கிலத்தில் கற்கத் தொடங்க வேண்டிய நிலை ஏற்படுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், அறிவியல் பாடத்தை சுகாதாரம், கலை மற்றும் இசைப் பாடங்களுடன் இணைப்பதற்கான காரணம் என்ன என்றும், டிஎல்பி திட்டத்தின் கீழ் புதிய பாடத்தை ஆங்கிலத்தில் கற்கும் வாய்ப்பைத் தொடர கல்வி அமைச்சு அனுமதிக்குமா என்றும் அவர் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
இந்தியர்களுக்கான விசா இல்லா நுழைவு 2027 இறுதிவரை நீட்டிக்கப்பட வேண்டும்! ஹோட்டல் சங்கம் கோரிக்கை

இந்தியர்களுக்கான விசா இல்லா நுழைவு 2027 இறுதிவரை நீட்டிக்கப்பட வேண்டும்! ஹோட்டல் சங்கம் கோரிக்கை

சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புதிய தேசிய பாதுகாப்புக் கொள்கை!

சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புதிய தேசிய பாதுகாப்புக் கொள்கை!

ராணுவ விமானங்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்! 3 ஆகாயப்படை அதிகாரிகள் உட்பட 6 பேர் நாளை குற்றஞ்சாட்டப்படுகின்றனர்

ராணுவ விமானங்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்! 3 ஆகாயப்படை அதிகாரிகள் உட்பட 6 பேர் நாளை குற்றஞ்சாட்டப்படுகின்றனர்

கேஎல்எஸ்சிஏஎச் நில விவகாரம்: தவறேதும் செய்யவில்லை – ஹன்னா இயோவின் அரசியல் செயலாளர் விளக்கம்

கேஎல்எஸ்சிஏஎச் நில விவகாரம்: தவறேதும் செய்யவில்லை – ஹன்னா இயோவின் அரசியல் செயலாளர் விளக்கம்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்களவையில் நிறைவேற்றம்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்களவையில் நிறைவேற்றம்

எச்ஆர்டி விருதுகளில் தங்கம் வென்ற நிறுவனம் – இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அழைப்பு

எச்ஆர்டி விருதுகளில் தங்கம் வென்ற நிறுவனம் – இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அழைப்பு