Nov 26, 2026
Thisaigal NewsYouTube

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்களவையில் நிறைவேற்றம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்களவையில் நிறைவேற்றம்

2027ஆம் ஆண்டுக்கான நாட்டின் வரவு செலவுத் திட்டம், இன்று மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, எவ்வித திருத்தங்களுமின்றி மூன்றாம் வாசிப்பில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாகத் துணை சபாநாயகர் ரம்லி நோர் தெரிவித்தார்.

இரண்டாவது நிதியமைச்சர் அமீர் ஹம்ஸா அஸிஸான் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார். இதனைத் துணை அமைச்சர் லியூ சின் தோங் வழிமொழிந்தார்.

மேலும், 2027ஆம் ஆண்டுக்கான மேம்பாட்டுச் செலவினங்களுக்காக அதிகபட்சம் 85 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்வதற்கான தனித் தீர்மானமும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்தகட்டமாக, இந்த வரவு செலவுத் திட்ட மசோதா விவாதம் மற்றும் ஒப்புதலுக்காக மேலவைக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
இந்தியர்களுக்கான விசா இல்லா நுழைவு 2027 இறுதிவரை நீட்டிக்கப்பட வேண்டும்! ஹோட்டல் சங்கம் கோரிக்கை

இந்தியர்களுக்கான விசா இல்லா நுழைவு 2027 இறுதிவரை நீட்டிக்கப்பட வேண்டும்! ஹோட்டல் சங்கம் கோரிக்கை

சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புதிய தேசிய பாதுகாப்புக் கொள்கை!

சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புதிய தேசிய பாதுகாப்புக் கொள்கை!

ராணுவ விமானங்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்! 3 ஆகாயப்படை அதிகாரிகள் உட்பட 6 பேர் நாளை குற்றஞ்சாட்டப்படுகின்றனர்

ராணுவ விமானங்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்! 3 ஆகாயப்படை அதிகாரிகள் உட்பட 6 பேர் நாளை குற்றஞ்சாட்டப்படுகின்றனர்

ஆங்கிலத்தில் அறிவியல் கற்கும் வாய்ப்பு பறிபோகுமா? கல்வி அமைச்சிடம் எம்.பி. கேள்வி!

ஆங்கிலத்தில் அறிவியல் கற்கும் வாய்ப்பு பறிபோகுமா? கல்வி அமைச்சிடம் எம்.பி. கேள்வி!

கேஎல்எஸ்சிஏஎச் நில விவகாரம்: தவறேதும் செய்யவில்லை – ஹன்னா இயோவின் அரசியல் செயலாளர் விளக்கம்

கேஎல்எஸ்சிஏஎச் நில விவகாரம்: தவறேதும் செய்யவில்லை – ஹன்னா இயோவின் அரசியல் செயலாளர் விளக்கம்

எச்ஆர்டி விருதுகளில் தங்கம் வென்ற நிறுவனம் – இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அழைப்பு

எச்ஆர்டி விருதுகளில் தங்கம் வென்ற நிறுவனம் – இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அழைப்பு