Nov 26, 2026
Thisaigal NewsYouTube

சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புதிய தேசிய பாதுகாப்புக் கொள்கை!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புதிய தேசிய பாதுகாப்புக் கொள்கை!

மாறிவரும் உலக அரசியல் சூழல் மற்றும் அதிகரித்து வரும் இணையவழிப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், 2026 முதல் 2030ஆம் ஆண்டு வரையிலான புதிய தேசிய பாதுகாப்புக் கொள்கையைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நாட்டின் பாதுகாப்புத் திசையையும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான வியூகங்களையும் உள்ளடக்கிய இக்கொள்கை, பாரம்பரியமற்ற புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இணையவழித் தாக்குதல்கள், நிதி அமைப்புகள், தற்காப்பு மற்றும் நாட்டின் முக்கியக் கட்டமைப்புகள் மீதான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அன்வார் வலியுறுத்தினார்.

மேலும், இணையப் பாதுகாப்புக்கென புதிய பிரிவுகளை உருவாக்குவதுடன், சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்த வேண்டும் என்றார்.

மொத்தம் 10 முக்கிய வியூகத் துறைகள், 30 செயல்திட்டங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ள 53 பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இக்கொள்கை வழிவகுக்கும் என்று பிரதமர் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேபிள் திருடர்களின் வெறிச்செயல்! குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமான 22 வயது இளைஞர் பலி

கேபிள் திருடர்களின் வெறிச்செயல்! குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமான 22 வயது இளைஞர் பலி

இந்தியர்களுக்கான விசா இல்லா நுழைவு 2027 இறுதிவரை நீட்டிக்கப்பட வேண்டும்! ஹோட்டல் சங்கம் கோரிக்கை

இந்தியர்களுக்கான விசா இல்லா நுழைவு 2027 இறுதிவரை நீட்டிக்கப்பட வேண்டும்! ஹோட்டல் சங்கம் கோரிக்கை

ராணுவ விமானங்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்! 3 ஆகாயப்படை அதிகாரிகள் உட்பட 6 பேர் நாளை குற்றஞ்சாட்டப்படுகின்றனர்

ராணுவ விமானங்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்! 3 ஆகாயப்படை அதிகாரிகள் உட்பட 6 பேர் நாளை குற்றஞ்சாட்டப்படுகின்றனர்

ஆங்கிலத்தில் அறிவியல் கற்கும் வாய்ப்பு பறிபோகுமா? கல்வி அமைச்சிடம் எம்.பி. கேள்வி!

ஆங்கிலத்தில் அறிவியல் கற்கும் வாய்ப்பு பறிபோகுமா? கல்வி அமைச்சிடம் எம்.பி. கேள்வி!

கேஎல்எஸ்சிஏஎச் நில விவகாரம்: தவறேதும் செய்யவில்லை – ஹன்னா இயோவின் அரசியல் செயலாளர் விளக்கம்

கேஎல்எஸ்சிஏஎச் நில விவகாரம்: தவறேதும் செய்யவில்லை – ஹன்னா இயோவின் அரசியல் செயலாளர் விளக்கம்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்களவையில் நிறைவேற்றம்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்களவையில் நிறைவேற்றம்