Nov 27, 2026
Thisaigal NewsYouTube

சுகே நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த ரேபிட் கேஎல் பேருந்து – ஓட்டுநர் காயமின்றித் தப்பினார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுகே நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த ரேபிட் கேஎல் பேருந்து – ஓட்டுநர் காயமின்றித் தப்பினார்

செராஸ், புக்கிட் செகார் அருகே உள்ள சுகே (SUKE) நெடுஞ்சாலையில் நேற்று பிற்பகல் ரேபிட் கேஎல் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இது குறித்து ரேபிட் கேஎல் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தப் பேருந்து ஹண்டால் இண்டா செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்துக்குச் சொந்தமானது என்றும், அப்போது பயணிகள் சேவையில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

அப்பேருந்தானது பராமரிப்புப் பணிக்காக கெப்போங் பணிமனையிலிருந்து பெரானாங் பகுதியில் உள்ள பழுதுபார்க்கும் நிலையத்துக்கு தொழில்நுட்பப் பணியாளர் ஒருவர் பேருந்தை ஓட்டிச் சென்றபோது, ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகத் தீப்பற்றியிருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் பேருந்தை ஓட்டிச் சென்ற தொழில்நுட்பப் பணியாளர் காயமின்றி உயிர் தப்பியதாக ரேபிட் கேஎல் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →