96.2 கிலோ மெத்தாம்பெத்தமின் போதைப்பொருள் கடத்தியதாக மூன்று ராணுவ அதிகாரிகள் உட்பட ஆறு பேர் மீது ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
சுபாங்கில் உள்ள விமானப்படைத் தளத்தின் நுழைவுப் பகுதியில் கடந்த நவம்பர் 17-ஆம் தேதி இந்தக் கடத்தல் சம்பவம் நிகழ்ந்ததாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீர் அடிஃபுடின் அமினுல்லா, அரிஃப் ஃபௌஸான் அலி, அமிருல் ஃபைஸால் ரோஸ்டின், டான் சுய் செங், நூர் ஹானிஸ் ஷஃபிகா முஹமட் அமீன், அஃபிஃபா அம்டாஸ் ஆகிய ஆறு பேரும் இணைந்து, போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
அபாயகரமான போதைப்பொருள் சட்டம் 39B பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம்.
இதனிடையே, ஆறு பேருக்கும் பிணை மறுக்கப்பட்டதுடன், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 23-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.








