Nov 27, 2026
Thisaigal NewsYouTube

சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தியதற்கு 82 வழக்குகள் பதிவு - எம்சிஎம்சி தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தியதற்கு 82 வழக்குகள் பதிவு - எம்சிஎம்சி தகவல்

சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக இதுவரை 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி தெரிவித்துள்ளது.

ஆபாசம், அநாகரிகம், பொய்யான தகவல்கள், அச்சுறுத்தல் மற்றும் கடுமையாகப் புண்படுத்தும் வகையிலான பதிவுகளைப் பகிர்ந்தது தொடர்பாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த 82 வழக்குகளில் 25 வழக்குகள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், 16 வழக்குகளில் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 41 வழக்குகளில் எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நவம்பர் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டவை என்றும் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →