தாங்கள் கேட்டுக்கொண்ட காலை உணவு , விரைந்து கொண்டு வரப்படவில்லை என்பதற்காக உணவகப் பணியாளரை துடைப்பத்தால் சரமாரியாக தாக்கியதாக நம்பப்படும் சம்பவம் தொடர்பில் இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் அமாட் சுகர்னோ முகமட் சஹாரி தெரிவித்தார்.
இச்சம்பவம் நேற்று காலைய 6 மணியளவில் கோலாலம்பூர், செந்தூல், ஜாலான் பெர்ஹெந்தி ஹஜி சலே வில் நிகழ்ந்தது. அந்த உணவகம், அப்போதுதான் திறக்கப்பட்ட நிலையில் காலை உணவுக்கான தயாரிப்புப்பணியில் அதன் பணியாளர்கள் ஈடுபட்டுக்கொண்டு இருந்த நிலையில் கேட்ட உணவு இன்னும் கொண்டு வரப்படவில்லை என்பதற்காக அந்த ஆடவர், உணவகப் பணியாளரிடம் தாக்கி, அடாவடித்தனம் புரிந்ததாக கூறப்படுகிறது என்று அமாட் சுகர்னோ குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட ஆடவர், அத்துடன் நின்றுவிடாமல் காலை 8.30 மணிளவில் மறுபடியும் அந்த உணவகத்திற்கு தமது நண்பருடன் நுழைந்து, நாற்காலிகள், மேஜைகள் போன்ற தளவாடப் பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த உணவகத்திற்கு 12 ஆயிரம் வெள்ளி இழப்பு என்று போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


