Aug 13, 2026
Thisaigal NewsYouTube
கே.எல்.ஐ.ஏவில் 19.82 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிப்பு – 7 பேர் கைது
தற்போதைய செய்திகள்

கே.எல்.ஐ.ஏவில் 19.82 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிப்பு – 7 பேர் கைது

Share:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் 247.8 கிலோகிராம் கஞ்சாவை கடத்த முயன்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களில் மலேசியப் பெண் ஒருவரும், ஆறு வெளிநாட்டவர்களும் அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் கூறுகையில், கடந்த ஜூலை 11, 13, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கே.எல்.ஐ.ஏ போதைப்பொருள் குற்றப் புலனாய்வு பிரிவும், மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்காட் துணை போலீசாரும் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், சந்தேகநபர்களின் பயணப் பொதிகளில் இருந்து 393 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மொத்த எடை 247.8 கிலோகிராம் என்றும், அதன் மதிப்பு 19.82 மில்லியன் ரிங்கிட் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போதைப் பொருளானது ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்ததாகவும் ஷாசெலி கஹார் தெரிவித்துள்ளார்.

Related News

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது