கோத்தா கினபாலு, செப்டம்பர்.26-
வரும் அக்டோபர் 10 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கம் 2026 ஆம் ஆண்டுகான பட்ஜெட்டின் போது, சபாவிற்கு நல்ல செய்தி அறிவிக்கப்படலாம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கோடி காட்டியுள்ளார்.
முந்தைய அரசாங்கங்கள் இதுவரை செயல்படுத்தாத நன்மைகளை மக்களுக்கு தமது தலைமையிலான அரசாங்கம் முதல் முறையாக வழங்கவிருக்கிறது என்று அன்வார் குறிப்பிட்டார்.
இன்று சபா, கோத்தா கினபாலு, கம்போங் கோபுனி, Dewan Pisompuruan மண்டபத்தில் சீர்திருத்தத்திற்கான 27 ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட ஹிம்புனான் தாமு ராபாட் உமும் எனும் நிகழ்ச்சியில் பிரதமர் இதனை அறிவித்தார்.








