ஜோகூர், உக்கு திராம்,தாமான் டேசா செமெர்லாங்கில் இரு அந்நிய நாட்டவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்ச் சண்டை கைகலப்பாக மாறியதில் ஆடவர் ஒருவர் மரணமுற்றார். இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் நிகழ்ந்தது. அந்த வீடமைப்புப்பகுதியில் தாங்கள் தங்கியிருந்த வாடகை வீட்டின்அறையில் இந்த தகராறு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் 37 வயது அந்நியப் பிரஜை மண்டதாக செரி அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ட் முஹமாட் சொஹைமி இஷாக் தெரிவித்தார்.
கழுத்தில் கடுமையான வெட்டுக்காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்த அந்த அந்நிய நாட்டவரின் உடல் சவப்பரிசோதனைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக முஹமாட் சொஹைமி குறிப்பிட்டார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது


