கோலாலம்பூர், அக்டோபர்.23-
முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினின் மருமகன் டத்தோ ஶ்ரீ முகமட் அட்லான் பெர்ஹானின் அனைத்துலகக் கடப்பிதழ் பறிமுதல் செய்யப்பட்டு விட்டதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
லஞ்ச ஊழல் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மினால் தேடப்பட்டு வரும் முகைதீன் யாசினின் மருமகனின் அனைத்துலக நுழைவாயிலும் முக்கிய ஆவணம், எஸ்பிஆர்எம் உத்தரவுக்கு ஏற்ப பறிமுதல் செய்யப்பட்டு விட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
தமக்கு தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் முன்னாள் பிரதமரின் அனைத்துலகக் கடப்பிதழ் பதிவு ரத்து செய்யப்பட்டு விட்டதாக சைஃபுடின் விளக்கினார்.








