மைஏர்லைன் விமான நிறுவனம் தொடர்பில் போலீசார் மேற்கொண்டு வரும் புலன் விசாரணையில் கைது செய்யப்பட்ட மூவர், போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அந்த நிறுவனத்தின் தோற்றுநர், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
ஒருவர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றப்புலனாய்வுத்தறை இயக்குநர் ரம்லீ முஹமாட் யூச்சொஃப் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி ஒரு வழக்கறிஞர் உட்பட நான்கு நபர்களை புக்கிட் அமான் போலீசார் கைது செய்து தடுத்து வைத்திருந்ததாக ரம்லி முகமட் யூசுப் குறிப்பிட்டார்.








