Oct 16, 2026
Thisaigal NewsYouTube

60 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்த வழக்குப் பதிவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
60 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்த வழக்குப் பதிவு

நவ. 27-

கோவிட்-19 தடுப்பூசி காரணமாக ஏற்பட்ட உடல்நல பாதிப்பாலும், இறப்பாலும் பிரதமர் அன்வர் இப்ராஹிம், WHO எனப்படும் உலக சுகாதார அமைப்பு, மேலும் 23 பேர் மீது 60 மில்லியன் ரிங்கீட் இழப்பீடு கோரி 8 மலேசியர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில், WHO இயக்குநர் Tedros Adhanom Ghebreyesus, முன்னாள் பிரதமர்கள் முகிதின் யாசின், இஸ்மாயில் சபரி யாகோப், சுகாதார அமைச்சு, மலேசிய அரசு ஆகியோர் குற்றவாளிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில், முன்னாள் சுகாதார இயக்குநர் Dr Noor Hisham Abdullah, முன்னாள் - இந்நாள் காவல்துறைத் தலைவர்களும் குற்றவாளிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

வழக்கு தொடர்ந்தவர்கள், கோவிட்-19 தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது கட்டாயமாக அதற்கானத் தடுப்பூசி போட வேண்டும் என்ற ‘பொது சுகாதாரக் கொள்கையின்’ தவறு காரணமாக தாங்கள் பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

வழக்கு தொடர்ந்தவர்களில், மூன்று டோஸ் தடுப்பூசி போட்ட பிறகு இறந்த ஒருவரின் மகன், இரண்டு டோஸ் போட்ட பிறகு இறந்த ஒரு பெண்ணின் கணவர், இரண்டு டோஸ் போட்ட பிறகு பக்கவாதம் ஏற்பட்ட ஒரு சுத்தம் செய்யும் தொழிலாளி ஆகியோர் அடங்குவர். மற்றொரு வழக்கில், ஒரு மசாஜ் தெரபிஸ்ட் ஒரு டோஸ் தடுப்பூசி போட்ட பிறகு கடுமையான பக்கவிளைவுகளை சந்தித்து, இப்போது சக்கர நாற்காலியைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வழக்கு தொடர்ந்தவர்கள் 60 மில்லியன் ரிங்கிட் பொது இழப்பீடு, சிறப்பு இழப்பீடு உதாரண இழப்பீடு ஆகியவர்றைக் கோருகின்றனர். மேலும், கோவிட்-19 கிருமிஎன்பது ‘போலி’ எனவும் அது மனிதனால் உருவாக்கப்பட்டது என்றும், ivermectin, colchicine போன்ற மருந்துகளை தடுப்பூசி போடாமல் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

மேலும், தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டம் போன்ற அனைத்து திட்டங்களுக்கும் தடை விதிக்கவும் கோரியிருந்தனர். அன்வரும் மலேசிய அரசும் உலக சுகாதார நிறுவனத்திலிருந்தும் உலகப் பொருளாதார மன்றத்திலிருந்து விலக வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரியிருந்தனர்.

இது குறித்து Malaysiakini வெளியிட்ட செய்தியின்படி, அரசாங்கமும் குற்றஞ்சட்டப்பட்ட மற்றவர்களும் தாங்கள் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கோலாலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் சட்டத்துறை அலுவலகம் மனுவை Mohamad Zainuddin & Co என்ற சட்ட நிறுவனத்தால் அக்டோபர் 23 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றம் இந்த வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பற்றி விவாதிக்க அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதியை முடிவு செய்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →