May 26, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
தற்போதைய செய்திகள்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

Share:

யாயாசான் அகல்புடி லஞ்ச ஊழல் வழக்கில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி, தமக்கு வழங்கப்பட்ட டி.என்.ஏ.ஏ எனப்படும் வழக்கிலிருந்து 'விடுவிப்பு' முடிவிற்கு எதிராக மலேசிய வழக்கறிஞர் மன்றம் தொடுத்த வழக்கை அனுமதித்த அப்பீல் நீதிமன்றத் தீர்ப்பை, இரத்து செய்யக் கோரி கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சாஹிட் ஹமிடிக்கு வழங்கப்பட்ட 'விடுதலை அல்லாத விடுவிப்பு' முடிவை சட்டரீதியாக எதிர்க்க மலேசிய வழக்கறிஞர் மன்றத்திற்கு அனுமதி வழங்கிய அப்பீல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்தே இந்த புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இரண்டாவது பதிலளிப்பாளராக உள்ள சாஹிட், 1964 ஆம் ஆண்டின் நீதித்துறை சட்டப் பிரிவு 96-ன் கீழ் தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஐந்து சட்டக் கேள்விகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த புதிய அரசியலமைப்போ அல்லது சட்டக் கேள்விகளோ முதல் முறையாக எழுப்பப்படும் வழக்குகளுக்கு மட்டுமே கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில், சாஹிட்டின் வழக்கறிஞரானஷாரூல் ஃபஸ்லி காமருல்ஜாமான், தேவையான வழக்கு ஆவணங்களை நேற்று கூட்டரசு நீதிமன்ற பதிவகத்தில் தாக்கல் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, முதல் பதிலளிப்பாளரானஅட்டர்னி ஜெனரலும் அடுத்த வாரம் தனியான மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு