Sep 26, 2026
Thisaigal NewsYouTube
ஆல்பர்ட் தே  மிரட்டல் விவகாரம்: அசாம் பாக்கியிடம் வாக்குமூலம் பெற போலீஸ் துறை முடிவு
தற்போதைய செய்திகள்

ஆல்பர்ட் தே மிரட்டல் விவகாரம்: அசாம் பாக்கியிடம் வாக்குமூலம் பெற போலீஸ் துறை முடிவு

Share:

வர்த்தகர் டத்தோ ஆல்பர்ட் தேக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்த விசாரணைக்காக, எஸ்.பி.ஆர்.எம்-இன் முன்னாள் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கியிடம் போலீஸ் துறை வாக்குமூலம் பெறவுள்ளது.

சபா மாநிலத்தின் உயர்மட்ட அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட ஊழல் புகார்களை அம்பலப்படுத்த முயன்றபோது, தனக்கு மிரட்டல்களும் அநீதிகளும் இழைக்கப்பட்டதாக ஆல்பர்ட் தே புகார் அளித்திருந்தார்.

இது குறித்து, புகார்தாரர் மற்றும் அவருக்கு மிரட்டலைத் தெரிவித்ததாகக் கூறப்படும் வழக்கறிஞர் ஆகிய இருவரிடமும் ஏற்கனவே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை சிஐடி இயக்குனர் டத்தோ எம். குமார் இன்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News