Sep 26, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் விலை ஏறாது! அடுத்த சில மாதங்களுக்குப் பற்றாக்குறையே இல்லை! - பிரதமர் அன்வார் உறுதி
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் விலை ஏறாது! அடுத்த சில மாதங்களுக்குப் பற்றாக்குறையே இல்லை! - பிரதமர் அன்வார் உறுதி

Share:

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும், மலேசியாவில் வரும் ஜூலை மாதம் வரை போதிய பெட்ரோல், டீசல் இருப்பு உள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.

மத்திய கிழக்கு மோதலால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஈரானுடனான நல்லுறவு காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாக மலேசியக் கப்பல்கள் பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளன என்றார் அவர்.

உலக சந்தையில் விலை உயர்ந்தாலும், உள்நாட்டில் RON95 பெட்ரோல் விலை தொடர்ந்து ஒரு லிட்டர் 1 ரிங்கிட் 99 சென்னாகவே நீடிக்கும் என்றும், போக்குவரத்து மற்றும் விவசாயத் துறைகளுக்கான டீசல் மானியம் தொடர்ந்து பாயும் என்றும் பிரதமர் திட்டவட்டமாகக் கூறினார்.

Related News