Jun 6, 2026
Thisaigal NewsYouTube
தைப்பிங் சிறைச்சாலை அத்துமீறல்: போலீஸ் துறையும், சட்டத்துறை தலைவரும் பதிலளிக்க வேண்டும்- கோபிந்த் சிங் கோரிக்கை
தற்போதைய செய்திகள்

தைப்பிங் சிறைச்சாலை அத்துமீறல்: போலீஸ் துறையும், சட்டத்துறை தலைவரும் பதிலளிக்க வேண்டும்- கோபிந்த் சிங் கோரிக்கை

Share:

தைப்பிங் சிறைச்சாலையில் கைதிகள் மீதான அத்துமீறல்கள் குறித்த மனித உரிமை ஆணையமான சுஹாகம் அறிக்கை, அதிர்ச்சியளிப்பதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

கைவிலங்கிடப்பட்ட கைதிகள் மீது மிதமிஞ்சிய வன்முறை, மிளகாய்த்தூள் தெளிப்பு மற்றும் மருத்துவப் பதிவுகளை போலியாக தயாரித்தது போன்ற காரணங்களால் ‘கான் சின் எங்’ என்ற கைதி மரணமடைந்ததுடன், 100-க்கும் மேற்பட்ட கைதிகள் காயமடைந்துள்ளனர் என சுஹாகாம் அறிக்கை கூறுகிறது.

2025 ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்த இச்சம்பவம் குறித்து போலீஸ் துறை எத்தனை புகார்களைப் பதிவு செய்துள்ளது, சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை ஐஜிபி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என கோபிந்த் சிங் வலியுறுத்தினார்.

மேலும், கைதியின் மரணத்திற்கு காரணமான அதிகாரி மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சட்டத்துறை தலைவரும் விளக்கமளிக்க வேண்டும் என்று கோபிந்த் சிங் கேட்டுக்கொண்டார்.

சிறைச்சாலைகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல என்றும், கைதிகளுக்கும் மனித உரிமைகள் உண்டு என்றும் குறிப்பிட்ட அவர், இச்சம்பவம் குறித்து அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பேசவிருப்பதாக கோபிந்த் சிங் உறுதியளித்தார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு