Jul 18, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் முஸ்லிம் அல்லாதார் வழிபாட்டுத் தல வழிகாட்டி நெறிமுறை: கலந்தாலோசிக்கப்படவில்லை /  சர்வ சமய மன்றம்  குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் முஸ்லிம் அல்லாதார் வழிபாட்டுத் தல வழிகாட்டி நெறிமுறை: கலந்தாலோசிக்கப்படவில்லை / சர்வ சமய மன்றம் குற்றச்சாட்டு

Share:

சிலாங்கூர் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதார் வழிபாட்டுத் தலங்களுக்கான புதிய திட்டமிடல் வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்கும் முன், பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் மாநில அரசு கலந்தாலோசிக்கவில்லை என்று மலேசிய பௌத்த, கிறித்துவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோயிச ஆலோசனை மன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது.

புதிய விதிகளின்படி, ஒரு வழிபாட்டுத் தலம் அமைக்கக் குறைந்தபட்சம் 5 ஆயிரம் குடியிருப்பாளர்கள் இருக்க வேண்டும் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் உயரம் பள்ளிவாசல்களின் உயரத்தைத் தாண்டக்கூடாது போன்ற நிபந்தனைகள் நடைமுறைக்குச் சாத்தியமற்றவை என்றும், இது அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் மத சுதந்திரத்திற்கு முரணானது என்றும் அந்த மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

வணிக வளாகங்களில் வழிபாட்டுத் தலங்கள் அமைக்க விதிக்கப்பட்டுள்ள தடையையும் அந்த மன்றம் கடுமையாக எதிர்த்துள்ளது. இதற்கிடையே, பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் தெரிவித்த அச்சத்தை தொடர்ந்து, இந்த வழிகாட்டி நெறிமுறைகள் மறுபரிசீலனைக்காகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

Related News