லங்காவி, பிப்ரவரி.21-
லங்காவி, Pantai Tanjung Rhu கடற்பகுதியில், நீந்தச் சென்ற சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர், நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.43 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக கெடா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின், லங்காவி நாலாம் பிரிவின் தலைவர் முஹமட் ஸம்ரி அப்துல் கானி தெரிவித்துள்ளார்.
49 வயதான அந்த நபர் தனது மகனுடன் கடலில் நீந்திக் கொண்டிருந்த போது, திடீரென மாயமாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தற்போது மாயமானவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் முஹமட் ஸம்ரி தெரிவித்துள்ளார்.








